சனி, 10 செப்டம்பர், 2016
பொருள் தந்த குலத்தாரின் குலதெய்வம்
பொன்னி நதியின் தென்கரையிலே
இன்முகம் காட்டூம் மலைமகளே,
வளம்பல தந்தாய் எங்கள்
குலம் செழிக்க வாழுகிறோம்.
நன்னடை தந்தாய் தாயே
நல்லவர் என்றும் போற்றிட,
தடை பல நீக்கி நின்
கன்னி பதிப்புகள் வெளியிகின்றோம்
மாயோன் சோதாரியே மலையம்மா,
எங்கள் காலம் உள்ள வரை
தூயவளே நின்பாதம் என்றும்
தொட்டுத் தொழுது வணங்கி நிற்கும்
கொங்கு வேளாள பொருள்தந்த குல குடிமக்கள்
எங்கள் வாழ்வு சிறக்க,
எங்கள் குடும்பம் செழிக்க
எங்கள் குடும்பம் செழிக்க
எங்கள் ஒற்றுமை நிலைக்க
தாயே அருள் புரிவாய்
பொருள் தந்த கூட்டத்தின் வரலாற்றுச்சுவடுகள்
அர்ச்சுணணுக்கு கீதை தந்தவன்
கண்ணன் என்னும் தேரோட்டி
அந்தக் கண்ணனுக்கும் உணவு தந்தவன்
உழவன் என்னும் ஏரோட்டி
இந்த ஏரோட்டிகளிலேதான் எத்தனை இனங்கள்!
வெள்ளாமையை தொழிலாக கொண்டவர்கள் வெள்ளாளர்கள்.சோழ நாட்டிலே குடியேறி வெள்ளாமை செய்தவர்கள் சோழிய
வெள்ளாளர்கள். துளுவ நாட்டிலே குடியேறி வெள்ளாமை செய்தவர்கள்
துளுவ வெள்ளாளர்கள். காரைக்காட்டு நாட்டிலே குடியேறி வெள்ளாமை செய்தவர்கள் காரைக்காட்டு வெள்ளாளர்கள். மங்காத புகழுடைய கொங்கு நாட்டிலே குடியேறி வெள்ளாமை மேற்கொண்டவர்கள்
கொங்கு வெள்ளாளர்கள் . கொங்கு வெள்ளாளர்களுக்கென்று பல சிறப்பு அம்சங்கள் உண்டு. குறிப்பாக கொங்கு குல மணமக்களை வாழ்த்தி பாடும் பாடல் கம்பரால் இயற்றப்பட்டது.
இன்று தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்கள். கொங்கு நாடு என்பது சேர சோழ பாண்டிய நாட்டின்
கங்கிலே இருந்தமையால், கங்கு என்பது மருவி கொங்கு என்று ஆனது. கொங்கு வெள்ளாளர்கள் இவ்வொரு தலைவரின் கீழ் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் உண்டு.
பொருளன் என்னும் கூட்ட முதல்வனின் வழியாக பெருகி வளர்ந்தவர்கள்
பொருளந்தை கூட்டம் (பொருளன்+ தந்தை) கீழ்க்கரை,பூந்துறை என்னும்
இன்று இருக்கும் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள கருமாபுரம் தான் ஆதிநாள் காணியாகும்.
கருமபுரத்தில் வாழ்ந்த காலத்திலே இவர்களுக்கு காங்கேயர்கள் என்னும் பட்டம்
வழங்கப்பட்டது.
பிற்காலத்தில் காடையூரிலும்,அங்கிருந்து கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக குடியேறினார்கள்.
சென்னிமலை பகுதியில் வாழ்ந்த ஈஞ்ச கூட்ட்த்தாருக்கும், சாந்தந்த கூட்டத்தாருக்கும் மைத்துனர்களாய் வாழ்ந்தார்கள்.
குறூநில மன்னர்களாகவும்,படைத்தளபதிகளாகவும் வாழ்ந்த காலத்தில் யாசித்தவர்களுக்கு இல்லையென்னாது பொருளை தந்தன்னர் என்பது வரலாறு.
விஜய மங்கலத்தை ஆட்சிசெய்த பொருள் தந்த குலத்தை சார்ந்த வாரணவாசி
மன்னர் தமிழ்ச்சங்கம் வைத்து புலவர்களுக்கும் கொடையளித்த்தால் “ குமரவள்ளல்” என்னும் பட்டம்
அளிக்க்ப்பட்ட்து என்று ஓதாளார் குறவஞ்சி பாடல் மூலம் தெரிகிறது. 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டில் காடையூர்
ஈஸ்வர்ருக்கு பொருள்தந்த குலத்தை சார்ந்த சிலம்பண்ணன் என்பவர் அளித்தகொடையை குறிப்பிட்டுள்ளது.
முத்துவீரநாயக்கர் ஆட்சி காலத்தில் பொருளந்தை குல கவுண்டர்கள், பொன்னாளிப்புலவருக்கு 200 குழி நஞ்சையும் 15 பொன்னும் கொடுத்து “பொருளந்தை குல மெச்சன்” என்ற பட்டம் வழங்கினர்.
அந்த செப்பேடு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது.
இவ்வாறாக பல காலக்கட்டங்களில் புலவர்களுக்கும் எளியவர்களுக்கும்
பொருள் தந்து துயர் துடைத்ததால் பொருள் தந்த குலம் எனப்பெயர் பெற்றது.இதற்கு சான்றாக பழைய செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும்
பொருளப்பன், பொருளாத்தா என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பொருள் தந்த கூட்டத்தின் காணிப்பாடல்
ஆதிகரு மாபுரம் காடையூர் தென்பழனை
ஆதியூர் விசைய மங்கை
அமுக்கியம் பரமத்தி புன்னமது தோடையம்
ஆலாம்பாடி ஆறை ஏழூர்(தோட்டக்குறிச்சி)
சோதிபெறு கொங்கனா பரம்வஞ்சி முத்தூரும்
சொக்கர் வாழ் மதுரை உறையூர்
சுயமான் நல்லூர் பிடாரியூர் மாம்பூண்டி
சொற்பொருளின் மாவூரட்டி
தாதுலவு இட்டமா நேமிசே மூரூடன்
தலையூர் நல் தூரம்பாடி
தமிழ்பெற்ற பிள்ளைக்கு அதிப ராகவளர்
தார்பெற்ற கொங்கு வேளிர்
நீதியுள்ள மன்னவர்கள் சிற்றம் பலத்தாரை
நினைக்கின்ற கங்கை குலமன்
நேர்மையது தவறாத பொருளந்தை குலத்தார்
நிலமையுடன் வாழ்க நன்றே.
தமிழகமெங்கும் உள்ள ஈரோடு,கரூர், நாமக்கல், சேலம், கோவை மற்றும் பல மாவட்டங்களில் வாழும் பொருள்தந்த குலத்தினர் தொட்டகுறிச்சி மலையம்மனை
குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.
மலையம்மனுக்கு காவல் தெய்வமாக கருப்பண்ணசாமி, மதுரைவீரன், புக்கராண்டி
போன்ற காவல் தெய்வங்கள் பொருள் தந்த குலத்திர்கு வீர தீரத்தை விடைக்கிறார்கள்.
கொங்கு குல தெய்வங்களை கும்மி பாடலாக பாடும்பொழுது மலையம்மனைப்பற்றி
நான்கு வரிகள் பாடப்பட்டுள்ளது..
மங்கலம் பொங்குது தோடையிலே-
அன்னைமலையம்மன் வாரா தேரினிலே
அன்னைமலையம்மன் வாரா தேரினிலே
தேர் மேலே வரும் அம்மனுக்கு
தேசமெங்கும்
தேசமெங்கும்
கும்மி கொட்டுங்கடி,
கும்மி கொட்டுங்கடி.
கும்மி கொட்டுங்கடி.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்
அருள்மிகு மலையம்மனுக்கு திருவிழாவும்,
ரதோற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது.
காலப்போக்கிலே விவசாயத்திற்கு பாதகம் ஏற்பட்டது. மண்ணையே நம்பியிருந்தால், வருங்காலம் இனி வெருங்காலம் தான் என்று
உணர்ந்த்உ, உப தொழிலிழாக,
நிதி நிறுவனம், ஜவுளி ஏற்றுமதி, மோட்டார் தொழில்,கல்வி நிறுவனங்கள் மற்றும் பல தொழில்
துறைகளிலும் பொருள் தந்த குலத்தினர் முத்திரை பதித்து வருவது பெருமைக்குறியதாகும்.
பொருள் தந்த குலத்தினர் சட்டமன்ற, பாராளுமன்ற, உறுப்பினர்களாகவும்,
அமைச்சராகவும் இருந்து மக்களுக்கு பணியாற்றியுள்ளார்கள்.
பொருள் தந்த கூட்டத்தினர் காணி கொண்ட ஊர்கள்:
கருமாபுரம், காடையூர், தென் பள்ளி, விஜயமங்கலம்,
மண்ணறை, அமுக்கியம், பரமத்தி,
புன்னம், ஆறுதொழவு,ஆலன்பாடி,
முத்தூர்,திருப்பூர், பிடாரியூர்,தோட்டக்குறிச்சி,ஓரத்தை,சுக்காலியூர்,
காடுவெட்டி பாளையம்,இன்னும் பல.
வெள்ளி, 2 செப்டம்பர், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)